தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுகோள்
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பெரம்பலூர்
100 நாள் வேலையை பாதுகாத்திடவும், அனைவருக்கும் வேலையை உத்திரவாதப்படுத்தவும் தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்தி, நகராட்சி, பேரூராட்சிகளில் 100 நாள் வேலையை விரிவுப்படுத்த வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன முட்லு நீர்த்தேக்கம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். முறைகேடுகளை களைந்து தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். விதவை, முதியோர், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உதவித்தொகை ரூ.1,000 பாரபட்சமின்றி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story