புல்லூர் கிராமத்தில் ஊருணியை தூர்வார கோரிக்கை


புல்லூர் கிராமத்தில் ஊருணியை தூர்வார கோரிக்கை
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புல்லூர் கிராமத்தில் ஊருணியை தூர்வார கோரிக்கை வைக்கப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா புல்லூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊருக்கு நடுவில் உள்ள பெரிய ஊருணியில் அல்லித்தாமரை செடிகள் முழுவதும் ஆக்கிரமித்து காணப்படுகிறது. இதனால் ஊருணி தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் அல்லித்தாமரை செடிகள் அழுகி துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே ஊருணியை தூர்வாரி, அல்லித்தாமரை செடிகளை முழுமையாக அகற்றி, ஊருணியை சுற்றி வேலி, படித்துறை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.


Next Story