நீலகிரி மாவட்டத்தில் தங்கி பணிபுரியம் வடமாநில தொழிலாளர்களை கண்காணிக்க குழு -மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் தங்கி பணிபுரியம் வடமாநில தொழிலாளர்களை கண்காணிக்க குழு -மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:46 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் தங்கி பணிபுரியம் வடமாநில தொழிலாளர்களை கண்காணிக்க குழு -மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வெளி மாநில தொழிலாளர்கள் மூலம் தமிழக மக்கள் பாதிக்கபடுவதாக கூறி நேற்று ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாட்ட செயலாளர் ஆர்.சிவா தலைமை தாங்கினார் பொது தொழிற்சங்க தலைவர் ஸ்டேன்லி அருள்தாஸ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் சிவா கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில், நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கட்டுமானத் தொழில்கள், தோட்ட நிறுவனத் தொழில்கள், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தமிழகத்தைச் சார்ந்த அமைப்புச்சாரா தொழிலாளர்கள் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் ஆங்காங்கே பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் வருகின்றனர். இதை தடுக்கும் நோக்கில் வடமாநிலத் தொழிலாளர்களை கண்காணிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட வேண்டும். என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story