சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவி தொகையை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம்


சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவி தொகையை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம்
x

சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவி தொகையை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. இதற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் அப்துல் நாசர் தலைமை தாங்கினார். இதில் அமைப்பின் மாநில செயலாளர் முகம்மது ஒலி கலந்து கொண்டு வருகிற பிப்ரவரி மாதம் 5-ந்தேதி திருச்சியில் நடைபெற உள்ள பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு குறித்து பேசினார். கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களின் கல்வியைப் பறிக்கும் விதமாக மெட்ரிக் உதவி தொகை எனும் 1 முதல் 8 வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையை ரத்து செய்த ஆளும் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், வருகிற ஜனவரி மாதத்தில் மாவட்டம் மற்றும் அனைத்து கிளைகள் சார்பில் மாபெரும் சமுதாய பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடத்தப்படும். பிப்ரவரி மாதம் 5-ந்தேதி தேதி திருச்சியில் நடைபெறவுள்ள பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அனைவரும் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story