தமிழ்நாட்டில் முதல்முறையாக விரைவில் மிதக்கும் உணவக கப்பல்..!


தமிழ்நாட்டில் முதல்முறையாக விரைவில் மிதக்கும் உணவக கப்பல்..!
x

மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் முதல்முறையாக முட்டுக்காடு படம் குழம் சுற்றுலா துறை சார்பில் 5 கோடி மதிப்பீட்டில் மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, பணிகள் குறித்து அமைச்சர் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அப்போது ஒரு மாதத்தில் பணிகள் முடிவடையும் என பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. முதல் தளம் திறந்த வெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.



1 More update

Next Story