கிணற்றுக்கு தடுப்பு சுவர் கட்டவேண்டும்


கிணற்றுக்கு தடுப்பு சுவர் கட்டவேண்டும்
x

ஆபத்தான நிலையில் இருக்கும் கிணற்றுக்கு தடுப்பு சுவர் கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுதாக்கு அருகே திம்மனாஞ்ே்சரி குப்பத்தில் உள்ள ரத்தினபுரீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வழியில் சுற்றுச்சுவர் இன்றி ஆபத்தான நிலையில் கிணறு ஒன்று உள்ளது. அவ்வழியாக பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் நடந்து செல்கின்றனர். அதுபோக இரவு நேரங்களில் கோவிலுக்கு செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான கிணறை சுற்றி சுவர் எழுப்பி மூடி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story