ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு, கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு

ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு, கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு
x

ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு, கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா மருதூர் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற சரவணன் தனது சொந்த ஊரான மருதூர் வடக்கு கிராமத்திற்கு வந்தார். சொந்த ஊருக்கு வந்த சரவணனுக்கு காரியாபட்டிணம் கடை தெருவில் கிராம மக்கள் மலர்மாலை, சால்வை அணிவித்து, அவரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். பின்னர் அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.

Next Story