அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்


அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 27 May 2023 6:45 PM GMT (Updated: 27 May 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது.

ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனருமான அமுதவல்லி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், நீர்வள ஆதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் துறை சுற்றுலாத்துறை, மீன்வளத்துறை, ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறை, மாவட்ட தொழில் மையம், பொதுப்பணித்துறை ஆகிய துறைகளின் சார்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், பணியின் தற்போதைய நிலவரம், முன்னேற்றம் குறித்தும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விரிவாக ஆய்வு நடத்தினார்.

ரூ. 83 ஆயிரத்து 500 மதிப்பில்...

தமிழக அரசின் திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பது அந்தந்த துறை அலுவலர்களின் தலையாய கடமையாகும் என்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 83 ஆயிரத்து 500 மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் ஸ்ரீலேகா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story