ராணிப்பேட்டையில் வருவாய்த்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

ராணிப்பேட்டையில் வருவாய்த்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 14 July 2023 6:27 PM GMT (Updated: 15 July 2023 10:22 AM GMT)

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசுகையில், வருவாய்த்துறை மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாற்றம் நிலுவை பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும். அதேபோன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பயனாளிகள் கணக்கெடுப்பு பணிகளில் எவ்வித பிரச்சினைகள் இல்லாமல், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், ஒருவரும் விடுபடாமல் தகுதியுள்ள நபர்கள் அனைவருக்கும் இத்திட்டத்தில் உதவித்தொகை வழங்க வருவாய் துறையினர் ஒருங்கிணைந்து களப்பணி ஆற்ற வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளி மற்றும் அனைத்து துணை ஆட்சியர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், நில அளவையர்கள் கலந்து கொண்டனர்.

Next Story