திருத்தம் செய்யப்பட்ட மின்னணு ரேஷன் அட்டை அனுப்பப்பட்டது
210 பயனாளிகளுக்கு திருத்தம் செய்யப்பட்ட மின்னணு ரேஷன் அட்டை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரேஷன் அட்டையில் திருத்தம் கோரி விண்ணப்பித்த 210 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அஞ்சல் வழியாக அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கலெக்டர் வளர்மதி பேசியதாவது :-
புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது குடும்ப அட்டையினை அஞ்சலில் பெற விரும்புகிறாரா அல்லது நேரில் பெற விரும்புகிறாரா என விருப்பம் தெரிவிக்க www.tnpds.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான அஞ்சல் கட்டணம் புதிய குடும்ப அட்டைக்கு ரூ.25-ம், நகல் ரேஷன் அட்டைக்கு அட்டை கட்டணம்ரூ.20-ம், அஞ்சல் கட்டணம் ரூ.25-ம் என மொத்தம் ரூ.45 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
அதன் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 210 பயனாளிகள் ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொழுது அஞ்சல் வழியாகவே புதிய திருத்தம் செய்யப்பட்ட மின்னணு நகல் அட்டையினை பெற விருப்பம் தெரிவித்து கட்டணம் செலுத்தி இருந்தனர். அவர்களுக்கான புதிய மின்னணு அட்டைகள் வரப்பெற்று அஞ்சலகம் வாயிலாக பயனாளிகளின் முகவரிக்கு அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.