பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய ரோபோ எந்திரத்தை பயன்படுத்த வேண்டும்


பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய ரோபோ எந்திரத்தை பயன்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 30 Jun 2023 6:45 PM GMT (Updated: 1 July 2023 10:41 AM GMT)

பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணிகளுக்கு ரோபோ எந்திரங்கள் பயன்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.

சிவகங்கை

சிவகங்கை

பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணிகளுக்கு ரோபோ எந்திரங்கள் பயன்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.

குறை கேட்கும் கூட்டம்

தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் நேற்று சிவகங்கை வந்தார்.அவரை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் மற்றம் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இன மக்கள், தூய்மைப்பணியாளார்கள் மற்றும் அனைத்து நலக்குழு உறுப்பினர்கள் ஆகியோர்களிடம் குறை கேட்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்கள், 11 பேரூராட்சிகள், 445 கிராம ஊராட்சிகள், தாட்கோ, ஆதிதிராவிடர் நலத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கை, ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கை, தினக்கூலி தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கை, பணி நிரந்தரம் செய்ய தகுதியான நபர்களின் எண்ணிக்கை ஆகியன குறித்தும், நேரடியாக கண்காணிப்புக்குழு உறுப்பினர்களிடமும், பணியாளர்களிடமும், சங்கங்களின் பிரதிநிதிகளிடமும் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் அவர் கூறும் போது:-

ரோபாே எந்திரங்கள்

எந்த ஒரு சூழ்நிலையிலும் தூய்மைப்பணியாளர்கள் மனித கழிவுகளை அகற்றுவதில் ஈடுபடக்கூடாது. பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதிகளில், சுத்தம் செய்யும் பணிகளுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரோபோ எந்திரங்கள் பயன்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் வசித்து வரும் குடியிருப்பிற்கு, தேசிய தூய்மை பணியாளர் ஆணைய குழுவின் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.


Next Story