வடசேரி பஸ்நிலையத்தில் போலீசாரிடம் சிக்கிய காதல்ஜோடி


வடசேரி பஸ்நிலையத்தில் போலீசாரிடம் சிக்கிய காதல்ஜோடி
x
தினத்தந்தி 20 May 2023 2:22 AM IST (Updated: 20 May 2023 3:02 PM IST)
t-max-icont-min-icon

வடசேரி பஸ் நிலையத்தில் போலீசாரிடம் சிக்கிய காதல்ஜோடியின் செல்போன்களில் இருவரும் தங்களது நிர்வாண படங்களை பகிர்ந்து கொண்டது தெரியவந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

வடசேரி பஸ் நிலையத்தில் போலீசாரிடம் சிக்கிய காதல்ஜோடியின் செல்போன்களில் இருவரும் தங்களது நிர்வாண படங்களை பகிர்ந்து கொண்டது தெரியவந்தது.

கல்லூரி மாணவி

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்துக்கு வெளி மாவட்ட மற்றும் கேரள மாநில பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். எனவே அசம்பாவிதம் நடைபெறுவதை தடுக்க பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரும் அவ்வப்போது பஸ் நிலையத்துக்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று காலையில் 19 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி சீருடையில் 22 வயதுடைய ஒரு வாலிபருடன் அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தார். இதை கவனித்துக் கொண்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபரும், கல்லூரி மாணவியும் தாங்கள் காதலித்து வருவதாக கூறினர்.

ஆபாச படங்கள்

மாணவி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு காதலனுடன் பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 2 பேரின் செல்போன்களை வாங்கி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வாலிபரின் செல்போனில் காதலியான அந்த கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படங்கள் இருந்தன. இதே போல் கல்லூரி மாணவியின் செல்போனில் சம்பந்தப்பட்ட வாலிபரின் ஆபாச படங்கள் இருந்தன.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மாணவியை கண்டித்தனர். அத்துடன் மாணவியிடம், 'தற்போதைய சூழ்நிலையில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வைத்து மிரட்டல் விடுப்பது, பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. அப்படி இருக்க எதற்காக இதுபோன்ற ஆபாச புகைப்படங்களை அனுப்பி உள்ளாய்?' என்று பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

எச்சரிக்கை

தொடர்ந்து 2 பேரும் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் மாணவியின் பெற்றோருக்கும், வாலிபரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். பெற்றோர் வந்ததும் மாணவியையும், வாலிபரையும் எச்சரித்து அவர்களது ெபற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் வடசேரி பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story