குறுவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி


குறுவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி
x

குறுவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி நடைபெற்றத.

கரூர்

கிருஷ்ணராயபுரம் வட்டார குறுவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி (செஸ்) போட்டி லாலாபேட்டையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார்.லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெயபால் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் சந்தராசகேரன் வரவேற்று பேசினார். போட்டியை தனியார் பள்ளி தாளாளர் தண்டாயுதபாணி தொடங்கி வைத்தார். இதில் 11, 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் முதல் பரிசு பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர் திலகா, சண்முகம், பவானி ஆகியோர் செயல்பட்டனர். முடிவில் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பார்வதி நன்றி கூறினர்.


Next Story