போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படும்; மேயர் மகேஷ் தகவல்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படும்; மேயர் மகேஷ் தகவல்
x

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படும் என மேயர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படும் என மேயர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ரவுண்டானா

நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி செட்டிகுளம் பகுதியில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையா் ஆனந்த் மோகன் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதேபோல் மணிமேடை பகுதியிலும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு கூறியதாவது:-

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைக்க முதற்கட்ட ஆய்வு நடந்தது. அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ரவுண்டானா அமைக்கப்படும். ரவுண்டானா அமைக்கப்படும்போது அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும். மேலும் மணிமேடை பகுதியில் ரவுண்டானாவை சுற்றி வாகனங்கள் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி பொறியாளர் பால சுப்பிரமணியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story