ஜல்லிக்கட்டு போட்டியில் ஓடிய காளை கண்மாயில் விழுந்து பலி - புதுக்கோட்டையில் நடந்த கோரம்


ஜல்லிக்கட்டு போட்டியில் ஓடிய காளை கண்மாயில் விழுந்து பலி - புதுக்கோட்டையில் நடந்த கோரம்
x

புதுக்கோட்டை திருவப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் அருகில் உள்ள கண்மாயில் விழுந்து சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவில் முறையான பாதுகாப்பு வசதி செய்யப்படாததால் வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் அருகில் உள்ள கண்மாயில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசு திருவிழாவை முன்னிட்டு

இன்று கவிநாடு கண்மாய் அருகே உள்ள திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது இதில் 900 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாட்டார்கள் கண்மாய் திடலில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. கண்மாயில் இடுப்பளவு தண்ணீர் இருப்பதால் வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்ட காளைகள் கலெக்ஷன் பாயிண்டிற்கு சென்று விட்டு பயந்து ஓடி கண்மாயில் விழுந்து செல்லும் அபாயம் ஏற்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கண்மாய்க்குள் விழுந்து திக்கு தெரியாமல் நீந்தி சென்றன. உரிமையாளர்கள் அவற்றை மீட்பதற்கு பெரும் பாடு ஏற்பட்டது. பாதுகாப்பு இல்லாமல் நடைபெற்ற போட்டியில் ஜல்லிக்கட்டு காளைகள்

மட்டுமல்லாது காளைகளின் உரிமையாளர்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான நிலையில் வெட்டன் விடுதி அருகே உள்ள கரம்பக்காடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது ஜல்லிக்கட்டு காளை ஒன்று கண்மாய் தண்ணீருக்குள் நீந்தி சென்றது.

பின்னர் நீரில் திக்குமுக்காடி திணறியது. வெளியே கரைக்கு வராமல் சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கண்மாயில் காளை வெளியில் வர முடியாமல் தவித்த நிலையில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது. ஜல்லிக்கட்டு காளை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story