திருச்சி ரோடு மேம்பால சுவரில் மோதிய விற்பனை பிரதிநிதி தூக்கிவீசப்பட்டு சாவு


திருச்சி ரோடு மேம்பால சுவரில் மோதிய விற்பனை பிரதிநிதி தூக்கிவீசப்பட்டு சாவு
x

கோவை -திருச்சி ரோடு மேம்பால தடுப்பு சுவரில் மோதியதில் விற்பனை பிரதிநிதி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார். இது அந்த பாலத்தில் நடந்த 3-வது உயிரிழப்பு சம்பவம் என்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

கோயம்புத்தூர்

கோவை -திருச்சி ரோடு மேம்பால தடுப்பு சுவரில் மோதியதில் விற்பனை பிரதிநிதி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார். இது அந்த பாலத்தில் நடந்த 3-வது உயிரிழப்பு சம்பவம் என்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

திருச்சி ரோடு மேம்பாலம்

கோவை திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரெயின்போ காலனி முதல் பங்குச்சந்தை கட்டிடம் வரை 3.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.253 கோடியில் மேம்பாலம் கட்டப் பட்டது.

இந்த மேம்பாலம் கடந்த மாதம் 11-ந்தேதி திறக்கப்பட்டது. பாலம் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களில் அடுத்தடுத்து 2 விபத்து நடைபெற்றது. இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

வேகத்தடைகள்

எனவே விபத்து நடப்பதை தடுக்க அந்த மேம்பாலம் தற்காலி கமாக மூடப்பட்டது. 10 இடங்களில் சிறிய வேகத்தடை அமைக் கப்பட்டது. அதைத் தொடர்ந்து விபத்து தடுப்பு பலகைகளும், ஒளிரும் பட்டைகளும் பொருத்தப்பட்டு கடந்த 9-ந்தேதி மேம்பாலம் போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டது.

பாலத்தில் நேராக செல்லும் சாலையில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வளைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும் என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.

தனியார் நிறுவன ஊழியர் சாவு

இந்தநிலையில் நேற்று 3-வது முறையாக விபத்து நடைபெற்றது. கோவை தாமஸ்வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது51). இவர் ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார்.

இவர், நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் ரெயின்போ காலனியில் இருந்து மேம்பாலத்தில் ஏறி சென்றார். அவர், சுங்கம் பகுதியில் மேம்பாலத்தின் வளைவில் வேகமாக சென்ற போது வேகத்தடையில் ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதியது.

இதில் 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து ஆனந்தகுமார் தூக்கி வீசப்பட்டு கீழே ரோட்டில் விழுந்தார். அப்போது அவருடையில் தலையில் பலத்த அடிபட்டு சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மேம்பாலத்தின் மேல் இருந்தது. அவர் மட்டும் கீழே ரோட்டில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ் கமிஷனர் ஆய்வு

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விபத்து நடந்த மேம் பால பகுதிக்கு சென்று பார்வையிட்டு விசாரித்தனர். இதைய டுத்து மேம்பாலத்தில் விபத்துகளை தடுக்க என்னென்ன? மாற்று நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று ஆய்வு செய்தனர்.

கோவை- திருச்சி ரோடு மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். இது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், திருச்சி ரோடு மேம் பாலத்தின் பக்கவாட்டு சுவரை தாண்டி ரோட்டில் விழுந்து ஒருவர் கீழே விழுந்து இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்பு சுவர்களின் உயரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும். விதிகளுக்கு மாறாக அமைக்கப் பட்ட வேகத்தடை தேவை தானா? என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

1 More update

Next Story