அரசு பஸ்சின் ஜன்னல் கண்ணாடி கழன்று விழுந்து பள்ளி மாணவன் விரல் துண்டானது...!


அரசு பஸ்சின் ஜன்னல் கண்ணாடி கழன்று விழுந்து பள்ளி மாணவன் விரல் துண்டானது...!
x

திருவெறும்பூர் அருகே அரசு பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவனின் கை விரலில் கண்ணாடி விழுந்ததில் துண்டாகி தொங்கியது.

திருவெறும்பூர்,

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர் மாதாகோவில் தெருவைச் சேர்ந்த ஜான்சன் மகன் ஸ்டீபன் (வயது11). பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகின்றார். மாணவன் ஸ்டீபன் இன்று காலை வழக்கம் போல் பெரிய சூரியூரிலிருந்து பள்ளிக்குச் செல்வதற்காக அரசு பஸ்சில் சென்றார்.

இந்த பஸ் காந்தலூர் பிரிவு சாலை அருகே உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பஸ்சின் ஜன்னல் கண்ணாடி கழன்று விழுந்தது. இந்த கண்ணாடி பள்ளி மாணவன் ஸ்டீபன் கையில் விழுந்ததில் விரல் துண்டாகி நுனியில் தொங்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த பள்ளி ஆசிரியர்கள் சிகிச்சைக்காக மாணவனை தனியார் மருத்துவமனை அனுமதித்தனர். பின்னர், அறுவை சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மாணவன் ஸ்டீபனுக்கு விரலில் தையல் மட்டும் போடப்பட்டு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி மாணவன் ஸ்டீபனின் மாமா வினோத் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story