விவசாய நிலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்தது


விவசாய நிலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 14 Nov 2022 6:45 PM GMT (Updated: 14 Nov 2022 6:46 PM GMT)

ரெட்டணை அருகே விவசாய நிலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபததில் மாணவன் படுகாயம் அடைந்தான்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே ரெட்டணையில் கென்னடி மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வேன் ஒன்று நேற்று தளவாழப்பட்டில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி நோக்கி புறப்பட்டது. வேனை அம்மன் குளத்து மேட்டை சேர்ந்த கமலதாசன் (வயது 40) என்பவர் ஓட்டினார். வேனில் 12 மாணவ-மாணவிகள் பயணம் செய்தனர். நாகந்தூர் வயல்வெளி சாலையில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள விவசாய நிலத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பள்ளி மாணவனான தளவாழப்பட்டை சேர்ந்த யுவனேஷ் (6) என்பவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவன் சிகிச்சைக்காக திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இது குறித்த புகாரின் பேரில் பெரியதச்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story