கோவில் கட்டும் பணியில் ஈடுபட்ட சிற்பி ஏணியில் இருந்து தவறி விழுந்து சாவு
கோவில் கட்டும் பணியில் ஈடுபட்ட சிற்பி ஏணியில் இருந்து தவறி விழுந்து சாவு
நாகை அருகே கோவில் கட்டும் பணியில் ஈடுபட்ட சிற்பி ஏணியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
சிற்பி
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 35). ்கோவில்களில் சிலைகள் செய்யும் சிற்பியான இவர், நாகை ஒன்றியம் பொரவச்சேரி பிரதான சாலையில் வசித்து வந்தார்.
நாகை ஒன்றியம் ஐவநல்லூரில் சாய்பாபா கோவில் கட்டும் பணியில் சிற்பி ராஜா ஈடுபட்டு வந்தார். நேற்று காலை கட்டிட பணிக்காக ஏணியில் ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
பரிதாப சாவு
இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்த தொழிலாளர்கள் மீட்டு உடனடியாக நாகை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜாவிற்கு மனைவியும், 4 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.