வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x

பாளையங்கோட்டையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள இட்டேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் முத்தையா (வயது 26). இவர் பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள பழைய பேப்பர், இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் முத்தையா கடையில் வேலை செய்து கொண்டு இருந்தார். அங்கு வந்த சென்னல்பட்டி பகுதியை சேர்ந்த சேது மகன் இசக்கிபாண்டி என்பவர் முத்தையாவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென இசக்கிபாண்டி தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் முத்தையாவை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தலை மற்றும் முதுகில் வெட்டு காயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் விசாரணை நடத்தினார். விசாரணையில், 2 பேருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி பந்தயம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக முத்தையாவை, இசக்கிபாண்டி வெட்டி இருக்கலாம் என்று தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசக்கிபாண்டியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story