ஏழை பெண்ணுக்கு தையல் எந்திரம்
ஏழை பெண்ணுக்கு தையல் எந்திரத்தை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அய்யனார்குளத்தை சேர்ந்த ஏழை பெண்ணுக்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. இலவச தையல் எந்திரம் வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், "என்னுடைய தொகுதியில் பல பகுதிகளுக்கு சென்று வருகிறேன். செல்லும் இடமெல்லாம் அப்பகுதி மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் வரவில்லை. கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை என்று புகார் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேசி வருகிறேன். இதனால் அப்பிரச்சினைகள் தற்போது சரி செய்யப்பட்டு வருகிறது. மேலும் தற்போது எனது சொந்த செலவில் நன்றாக படித்து அதிக மதிப்பெண் வாங்கி தந்தை இல்லாத குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையும், தள்ளுவண்டி வைத்து துணி தேய்த்து கொடுப்பவர்களுக்கு இஸ்திரி பெட்டியும், தையல் தொழில் தெரிந்த இளம் விதவைகளுக்கு தையல் எந்திரமும் வழங்கி வருகிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கண்ணன், அம்பை ஒன்றிய அ.தி.மு.க. துணை செயலாளர் பிராங்கிளின் மற்றும் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.