சிதிலமடைந்த பி.ஏ.பி. வாய்க்கால்
ஜோத்தம்பட்டி பகுதியில் சிதிலமடைந்த பி.ஏ.பி. வாய்க்காலை புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோயம்புத்தூர்
நெகமம்
நெகமம் அருகே பிரதான பி.ஏ.பி. வாய்க்கால் கெடிமேடு, பூசாரிபட்டி, ஜோத்தம்பட்டி, மூலனூர் வழியாக திருப்பூர் மாவட்டம் சென்றடைகிறது. இந்த வாய்க்காலில் பி.ஏ.பி. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பல்வேறு விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தநிலையில் ஜோத்தம்பட்டி பகுதி வழியாக செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலின் இருபுறமும் பக்கவாட்டில் சிமெண்ட் கற்கள் பெயர்ந்து உள்ளது. இதனால் தண்ணீர் வரும் காலங்களில் தண்ணீர் விரையமாகி வருவதுடன், கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் சீராக செல்வதில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, இந்த வாய்க்காலை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story