புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது
கழுகுமலையில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலை குமரேசன் நகர் பகுதி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கழுகுமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கழுகுமலை போலீஸ் சப-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு பலசரக்கு கடையில் 15 பாக்கெட்டுகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.2,500 என கூறப்படுகிறது. விசாரணையில், அவர் கடையில் புகையிலை பொருட்களை விற்று வந்தது தெரிய வந்தது. அந்த கடையில் காலாவதியான குளிர்பானங்களும் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் சுப்பிரமணியனை(வயது 50) கைது செய்தனர்.
Related Tags :
Next Story