அட்டகாசம் செய்யும் ஒற்றை யானை


அட்டகாசம் செய்யும் ஒற்றை யானை
x
தினத்தந்தி 15 March 2023 1:00 AM IST (Updated: 15 March 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:-

சூளகிரி அருகே ஒற்றை யானை ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. இந்த யானையை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒற்றை யானை

குளகிரி அருகே ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் நீண்ட நாட்களாக ஒற்றை காட்டு யானை பதுங்கியிருந்து இரவு நேரங்களில் அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.அதுமட்டும் அல்லாமல் அங்கு பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

அட்டகாசம்

அதன் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களாக சூளகிரி அருகே நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்தில் ஒற்றை யானை புகுந்து விவசாய பயிர்களையும், விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களையும் மிதித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது.

இதனால் விவசாயிகளும், கிராம மக்களும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். எனவே அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story