சிறு தவறு நிகழ்ந்தாலும் பெரிய கெட்டப் பெயரை ஏற்படுத்தி விடும் - அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்


சிறு தவறு நிகழ்ந்தாலும் பெரிய கெட்டப் பெயரை ஏற்படுத்தி விடும் -  அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
x

சிறு தவறு நிகழ்ந்தாலும் பெரிய கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடும். அதே நேரத்தில் சிறு உதவி என்றாலும் அது பெரிய நல்லப் பெயரை உருவாக்கும் என அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை,

வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-

* மழைநீர் தேங்காதவாறு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் கடமையும், பொறுப்பும் ஆகும். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே மீட்க வேண்டும்.

* மின்சாரம், பால், குடிநீர் உள்ளிட்டவை தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

* மக்களை காக்க வேண்டும் என்பதே நமது இலக்கு.அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

* உள்ளாட்சி அமைப்புகள்,வருவாய்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்துறை, தீயணைப்பு துறைகள் என அனைவரும் தனித்தனியே செயல்படாமல் ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.

* தொலைபேசியிலோ,வாட்ஸ்அப்பிலோ வரக்கூடிய புகார்களை உடனே நிவர்த்தி செய்ய வேண்டும்.

* வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

* கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்று மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

* மண்டல அளவில் பல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும்.

* நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.

* பழுதடைந்த, பலவீனமான சுற்றுச்சுவர்கள் அப்புறப்படுத்த வேண்டும்.

* பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர், மின்சாரவசதி கிடைப்பதை கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

* அரசுத்துறையினருடன் மக்களும் இணைந்து செயல்படுவதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

* நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும், மின்சாரம் சார்ந்த விபத்துகளை தடுக்க வேண்டும்.

* அதிகாரிகளிடம் தெரிவித்தோம், உடனடியாக நிவர்த்தி செய்தார்கள் என மக்கள் கூறுவதே மிகப் பெரிய பாராட்டு.

* சிறு தவறு நிகழ்ந்தாலும் பெரிய கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடும். அதே நேரத்தில் சிறு உதவி என்றாலும் அது பெரிய நல்லப் பெயரை உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story