குடிபோதையில் பிடித்த வாலிபரை பாம்பு கடித்தது


குடிபோதையில் பிடித்த வாலிபரை பாம்பு கடித்தது
x

வாணியம்பாடியில் குடிபோதையில் பிடித்த வாலிபரை பாம்பு கடித்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அம்ஜத் (வயது 35). இவர் குடிபோதையில் அந்தப்பகுதியில் சென்ற ஒரு நாகப்பாம்பை கையில் பிடித்துள்ளார். அப்போது அந்த பாம்பு அவரை கடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, கடித்த பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்து எடுத்துக் கொண்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அம்ஜத்துக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்டிலில் பாம்பு உடன் சிகிச்சைக்கு வந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story