மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பு


மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பு
x

நாட்டறம்பள்ளியில் மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியா அடுத்த வேட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் தாயப்பன் கவுண்டர் தெருவுக்கு சென்றார். அங்கு உள்ள அரச மரத்தடியில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு, டீ கடைக்கு சென்றார். அப்போது அரச மரத்தின் மீது இருந்து பாம்பு ஒன்று மோட்டார் சைக்கிள் மீது விழுந்து சீட்டுக்கு அடியில் புகுந்தது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கை வரவழைத்து பிரித்து பார்த்த போது கொம்பேரி மூக்கன் பாம்பு உள்ளே இருந்தது.

தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் 3 அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை பெற்றுக் கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story