கலெக்டர் பங்களாவில் பாம்பு புகுந்தது


கலெக்டர் பங்களாவில் பாம்பு புகுந்தது
x

திருப்பத்தூர் கலெக்டர் பங்களாவில் புகுந்த பாம்பு பிடிபட்டது

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் பங்களாவில் நேற்று சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த அங்கிருந்த பணியாளர்கள் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் (பொறுப்பு) முருகன் தலைமையிலான வீரர்கள் சென்று பாதுகாப்பான முறையில் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


Next Story