சங்கராபுரத்தில் வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது


சங்கராபுரத்தில்    வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:15:53+05:30)

சங்கராபுரத்தில் வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது.

கள்ளக்குறிச்சி


சங்கராபுரம்,

சங்கராபுரம் குளத்துப்பாதை தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி வெங்கலட்சுமி. இவருடைய வீட்டுக்குள் நேற்று காலை 3 அடி நீலமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் குடும்பத்தினர் அலறியடித்தபடி வீட்டைவிட்டு, வெளியே ஓடி வந்தததோடு, இதுபற்றி சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நல்ல பாம்பை பிடித்து தொலைவில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story