வீட்டுக்குள் புகுந்த பாம்பு


வீட்டுக்குள் புகுந்த பாம்பு
x
தினத்தந்தி 4 April 2023 1:00 AM IST (Updated: 4 April 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே வீட்டுக்குள் பாம்பு புகுந்தது .

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 29). இவர், பெங்களுரூவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் இவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் அவரது தாய் மற்றும் சகோதரி வீட்டின் முன்பு அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. இதைக்கண்ட அவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து மதன்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர், வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) சாமிநாதன் தலைமையிலான தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். பின்னர் வீட்டின் ஒரு அறையில் பதுங்கி இருந்த பாம்பை அரைமணி நேரம் போராடி லாவகமாக பிடித்தனர். அது 6 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு ஆகும். பின்னர் அந்த பாம்பு, அங்குள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.



----


Reporter : Srinivasan Location : Dindigul - VEDASANDUR



Next Story