தபால்காரர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு
பழனியில் தபால்காரர் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது.
பழனி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் திவாகர். ஓய்வுபெற்ற தபால்காரர். நேற்று இவரின் வீட்டு பகுதியில் உள்ள சிலாப்புக்கு அடியில் நாகப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதுகுறித்து பாம்பு பிடிக்கும் நபரான பழனி நகராட்சி கவுன்சிலர் நடராஜனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு சென்று சிலாப்புக்கு அடியில் பதுங்கி இருந்த 4 அடி நீள நாகப்பாம்பை பிடித்தார். பின்னர் அது பழனி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் கொடைக்கானல் சாலையில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
இதேபோல், கோபால்பட்டி அருகேயுள்ள கன்னியாபுரத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 60). பால் வியாபாரி. இவரது வீட்டுக்குள் நேற்று மதியம் 12 மணி அளவில் பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த ராமன் உடனே நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் பதுங்கி இருந்த சுமார் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்தனர். பின்பு அதனை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.