அரிசி ஆலைக்குள் புகுந்த பாம்பு


அரிசி ஆலைக்குள் புகுந்த பாம்பு
x

போடி அருகே அரிசி ஆலைக்குள் பாம்பு ஒன்று புகுந்தது.

தேனி

போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவர் அதே பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் அரிசி ஆலைக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த அன்பரசன் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் அரைமணி நேரம் போராடி 7 அடி நீளமுள்ள சாரைபாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை, போடி அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.


Next Story