வீட்டுக்குள் பதுங்கியிருந்த பாம்பு
நிலக்கோட்டையில் வீட்டுக்குள் பதுங்கியிருந்த பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
திண்டுக்கல்
நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பெரியார் காலனியை சேர்ந்தவர் சின்னய்யா (வயது 50). இவர், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தனது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் ஒரு பகுதியில் இருந்த குப்பைகளை அகற்றியபோது, அங்கு நல்ல பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சின்னய்யா மற்றும் குடும்பத்தினர் அலறியடித்தபடி வீட்டைவிட்டு வெளியேறினர். உடனே இதுகுறித்து நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள், வீட்டில் பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு காட்டுப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது.
Related Tags :
Next Story