பள்ளியின் மேற்கூரையில் பதுங்கியிருந்த பாம்பால் பரபரப்பு


பள்ளியின் மேற்கூரையில் பதுங்கியிருந்த பாம்பால் பரபரப்பு
x

நடுமலை எஸ்டேட்டில் பள்ளியின் மேற்கூரையில் பதுங்கியிருந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட்டில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. நேற்று வழக்கம்போல் பள்ளி திறந்தது. இந்த நிலையில் பள்ளியின் மேற்கூரையில் பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது, இதனைக்கண்ட பள்ளி மாணவ-மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறினர். இதையடுத்து ஆசிரியர்கள் வால்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பள்ளியின் மேற்கூரையில் பதுங்கி இருந்த பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பாம்பு மேற்கூரையில் இருந்து கட்டிட சுவரில் இருந்த துளைக்குள் சென்று பதுங்கி கொண்டது. இதனால் தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடியும் பாம்பை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து மற்றொரு வகுப்பறையில் வைத்து மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு படையினர் பள்ளி வகுப்பறைகள் மற்றும் சுற்று பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது பள்ளியில் பயன்படுத்தாத அறையில் இருந்து பாம்பு சட்டைகளை கைப்பற்றினர். மேலும் பாம்பு நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு ஆசிரியர்களிடம் தீயணைப்பு துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story