மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பு பிடிபட்டது


மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பு பிடிபட்டது
x

பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பு பிடிபட்டது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி அருகே முகமது ரபிக் என்பவர் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலையில் அவருடைய கடைக்குள் ஒரு பாம்பு புகுந்தது. அதை அங்கிருந்த நபர் ஒருவர் பார்த்து கூறினார். அதற்குள் அந்த பாம்பு அருகே நிறுத்தப்பட்டிருந்த அவருடைய மோட்டார் சைக்கிளில் புகுந்து விட்டது.

இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


Next Story