வாகனம் மோதி உயிருக்கு போராடிய மலைப்பாம்பு


வாகனம் மோதி உயிருக்கு போராடிய மலைப்பாம்பு
x

கடையம் அருகே வாகனம் மோதி உயிருக்கு போராடிய மலைப்பாம்பு குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

தென்காசி

கடையம்:

கடையம்- தென்காசி மெயின் ரோட்டில் செட்டிமடம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த மலைப்பாம்பு வாயை திறந்து மூடியவாறு, சாலையில் உயிருக்கு போராடியவாறு கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள், மலைப்பாம்பு படுகாயத்துடன் கிடந்ததை தங்களது செல்போனில் படம் எடுத்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story