ரெயில்வே மின்கம்பியில் உலா வந்த பாம்பு
ரெயில்வே மின்கம்பியில் பாம்பு உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி
மணப்பாறை ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே மின்கம்பியில் உள்ள மின்மாற்றி அருகே நேற்று திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் ரெயில்வே பணியாளர்கள் வந்து பார்த்த போது சுமார் 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு மின்சாரம் தாக்கி செத்து கிடந்தது. அதிக திறன் கொண்ட மின்கம்பியில் பாம்பு சென்றதால் மின்சாரம் தாக்கி செத்தது தெரியவந்தது. இதனால் ரெயில் பாதை மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் ரெயில்வே ஊழியர்கள் பாம்பை அப்புறப்படுத்திய பின்னர் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story