கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் பட்டா பெறுவது குறித்து சிறப்பு முகாம் நடத்த வேண்டும்- சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் பட்டா பெறுவது குறித்து சிறப்பு முகாம் நடத்த வேண்டும்- சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் பட்டா பெறுவது குறித்து சிறப்பு முகாம் நடத்த வேண்டும்- சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

கோயம்புத்தூர்

நெகமம்

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் சொக்கனூர் பிரபு என்கிற திருநாவுக்கரசு தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சப்-கலெக்டர் பிரியங்காவிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கிராமங்களில் கிராம நத்தம், பட்டாவில், எச்.எஸ்.டி பட்டாவில் 30 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது. இந்த பட்டாவில் 1 ½ அல்லது 2 சென்ட் என்ற அளவில் இடம் வழங்கப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவர்கள் இறந்துவிட்டனர். இவர்களின் வாரிசுகள் இரண்டு அல்லது மூன்று பேருக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர் இதில் மிகக் குறுகலான இடம் என்பதால் யாரோ ஒருவர் மட்டும் குடி இருந்து வருகின்றனர். இவர்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்வதற்கு இறப்புச் சான்று வாரிசு சான்று தேவைப்படுகிறது. இதில் இரண்டு மூன்று தலைமுறை கடந்து விட்டதால் அவர்களின் இறப்பு மற்றும் வாரிசு சான்று பெறுவதில் மிகவும் சிரமமான சட்ட நடைமுறையை பின்பற்ற வேண்டி உள்ளது. விழிப்புணர்வும் குறைவாக உள்ளவர்கள் அதிகம் இவர்களெல்லாம் தனித்தனியாக சென்று பட்டா மாறுதல் செய்து அவர்களது பெயரில் பட்டா பெறுவது எளிதான காரியம் அல்ல. இவைகளை வருவாய்த்துறை மூலம் அவசர அவசியம் கருதி ஒவ்வொரு கிராமத்திலும் சிறப்பு முகாம் நடத்தி உரிய நபர்களுக்கு பட்டா மாறுதல் செய்து வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story