விக்கிரமங்கலத்தில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் விக்கிரமங்கலத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமினை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் ஆனந்த குமார், கலெக்டர் ரமணசரஸ்வதி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் மாற்றுத்திறனாளிகளை டாக்டர்கள் பரிசோதனை செய்து, 20 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்கினர். மேலும் இம்முகாமில், 51 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இதில் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டையை பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.