தொழிற்சாலைகள் அமைக்க கடனுதவி பெற சிறப்பு முகாம் 17-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை நடக்கிறது


தொழிற்சாலைகள் அமைக்க கடனுதவி பெற சிறப்பு முகாம் 17-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை நடக்கிறது
x

தொழிற்சாலைகள் அமைக்க கடனுதவி பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 17-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக்கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இது வரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இந்த கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

மறைமலை நகர் கிளை அலுவலகத்தில் எண்-42 மற்றும் 43, முதல் தளம், எம்.ஜி.ஆர்.சாலை, மறைமலை நகர், சென்னை குறு சிறு மற்றும் நடுத்தர (எம்.எஸ்.எம்.எம்.இ) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வருகிற 17-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1½ கோடி வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story