செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாய நில பத்திரப்பதிவில் உள்ள குறைகளுக்கு தீர்வு காண சிறப்பு கூட்டம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாய நில பத்திரப்பதிவில் உள்ள குறைகளுக்கு தீர்வு காண சிறப்பு கூட்டம்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாய நில பத்திரப்பதிவில் உள்ள குறைகளுக்கு தீர்வு காண சிறப்பு கூட்டம் நாளை கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கான பத்திரப்பதிவில் உள்ள பல்வேறு குறைகளுக்கு தீர்வு காண விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பத்திரப்பதிவில் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story