அமிர்தகடேஸ்வரர் கோவில் யானைக்கு சிறப்பு பூஜை


அமிர்தகடேஸ்வரர் கோவில் யானைக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 13 Aug 2023 12:15 AM IST (Updated: 13 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அமிர்தகடேஸ்வரர் கோவில் யானைக்கு சிறப்பு பூஜை நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோவிலில் அபிராமி அம்மனுடன் அமிர்தகடேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு ஆயுள் விருத்திக்காக சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் நேற்று யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவிலில் உள்ள அபிராமி யானைக்கு சிறப்பு பூஜை நடந்தது. அப்போது யானைக்கு கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் உணவாக வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story