உலக நன்மைக்காக சிறப்பு யாகம்


உலக நன்மைக்காக சிறப்பு யாகம்
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-02T00:16:41+05:30)

ஆதி நாகாத்தம்மன் சக்தி கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே குமிளங்காடு கிராமத்தில் ஆதி நாகாத்தம்மன் சக்தி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தை மாதம் சிறப்பு யாகம் நடைபெறும். அதன்படி உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி ேகாவில் வளாகத்தில் சப்த மண்டல ஞான சுத்த சித்தி யாகம் நடைபெற்றது. யாக குண்டத்தில் பல்ேவறு பொருட்கள் போடப்பட்டன. அதனை தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இ்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story