ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாக வேள்வி
சங்கராபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாக வேள்வி
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் முதல் பாலமேடு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 5-ம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு சிறப்பு யாக வேள்வி நடைபெற்றது.
முன்னதாக ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மனுக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், யாகவேள்வி நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சங்கராபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story