எச்சரிக்கை பலகையுடன் வேகத்தடை அமைக்க வேண்டும்


எச்சரிக்கை பலகையுடன் வேகத்தடை அமைக்க வேண்டும்
x

எச்சரிக்கை பலகையுடன் வேகத்தடை அமைக்க வேண்டும்

திருவாரூர்

திருவாரூர் புதிய பஸ்நிலையம் பகுதியில் எச்சரிக்கை பலகையுடன் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

போக்குவரத்து நெரிசல்

திருவாரூர் மாவட்டத்தின் தலைநகராக இருந்த போதிலும் போதிய வசதிகள் இன்றி பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வந்தனர். கடந்த 2019 ஆண்டு திருவாரூர் விளமல் கல்பாலம் அருகில் தஞ்சை பிரதான சாலையில் ரூ.13 கோடியே 36 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு பிப்ரவரி 27-ந் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கிறது. இதன் காரணமாக தஞ்சை பிரதான சாலையில் இருந்து பஸ்கள் பஸ் நிலையம் உள்ளே செல்வதிலும், பஸ் நிலையத்தில் இருந்து வெளியில் செல்வதிலும் சிரமங்கள் இருந்து வருகிறது.

எச்சரிக்கை பலகையுடன் வேகத்தடை

நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகன போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதுடன், வாகனங்கள் வேகமாக கடந்து செல்லும் பகுதியாகவும் இருந்து வருகிறது. எனவே இந்த இடத்தில் பஸ்நிலையம் உள்ளதற்கான எச்சரிக்கை பலகை இல்லாமல் உள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வரும் பஸ்கள் பஸ் நிலையத்திற்கு திரும்பும் போது பின்னால் மற்றும் முன்னால் வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பஸ் நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் எச்சரிக்கை பலகையுடன் வேகத்தடை அமைத்திட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story