குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயிலில் ஆன்மிக சுற்றுலா வந்தவர் திடீர் சாவு


குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயிலில் ஆன்மிக சுற்றுலா வந்தவர் திடீர் சாவு
x

குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயிலில் ஆன்மிக சுற்றுலா வந்தவர் திடீரென இறந்தார்.

திருச்சி

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பயணிகள் அங்கிருந்து சிறப்பு ரெயிலில் ராமேசுவரத்துக்கு ஆன்மிக சுற்றுலா புறப்பட்டனர். இதில் குஜராத்தை சேர்ந்த மொபட்லால் சிவராம்பாய் (வயது 67) என்பவரும் உறவினர்களுடன் வந்தார். இவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்து, ரெயிலில் இருந்து இறங்கி சென்றனர். ஆனால் மொபட்லால் சிவராம்பாய் மட்டும் வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. சக பயணிகள் அவரை எழுப்பியபோது, பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தார். உடனே ரெயில்வே டாக்டர் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story