நாய் துரத்தியதில் கம்பி வேலிக்குள் சிக்கிய புள்ளிமான் சாவு


நாய் துரத்தியதில் கம்பி வேலிக்குள் சிக்கிய புள்ளிமான் சாவு
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கமுதி அருகே நாய் துரத்தியதில் கம்பி வேலிக்குள் சிக்கிய புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி-குண்டாறு பகுதி முழுவதும் அடர்ந்த கருவேல மரங்களால் சூழப்பட்டுள்ள பகுதி ஆகும். இப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள், மயில்கள் மற்றும் அரிய வகை வெள்ளை மயில்கள் வசித்து வருகின்றன. ஆனால் தற்போது நிலவி வரும் கடுமையான வெயில் காரணமாக மான் மற்றும் மயில்கள் தண்ணீர் குடிப்பதற்கு குடியிருப்பு பகுதியை நோக்கி வருகின்றன. இந்நிலையில் கமுதி-குண்டாறு கரை பகுதியில் சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சுற்றுப்பகுதியில் கம்பிவேலி போடப்பட்டுள்ளது. தண்ணீர் குடிப்பதற்காக இந்த கோவில் அருகே வந்த 7 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் ஒன்றை அப்பகுதியில் உள்ள நாய்கள் துரத்தியுள்ளன. இதில் பதற்றம் அடைந்த புள்ளிமான் கம்பி வேலிகளுக்குள் சிக்கி பரிதாபமாக பலியானது. இது குறித்து, தகவல் அறிந்து வந்த கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இறந்த புள்ளிமானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story