இந்து முன்னணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்


இந்து முன்னணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணி திருவண்ணாமலை நகரம் சார்பில் தெருமுறை பிரசார கூட்டம் நடைபெற்றது.

நகர தலைவர் நாகா.செந்தில் தலைமை தாங்கினார். நகர பொது செயலாளர் மஞ்சுநாதன், பொருளாளர் மனோ, செயற்குழு உறுப்பினர் ராஜீவ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர செயலாளர் பச்சையம்மன் சுரேஷ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் இரா.அருண்குமார் கலந்து கொண்டு பேசினார்.

இதில் கோவில்களை விட்டு இந்து சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும். கோவில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசப்பட்டது.

இதில் இந்து முன்னணியினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story