ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவன் படுகாயம்


ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவன் படுகாயம்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவன் படுகாயம்

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு பகுதியை சேர்ந்த சிறுவன் அஜய்(வயது 16). பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான். இவன், பள்ளி விடுமுறை விடப்பட்டு இருந்ததால், நாடுகாணியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு செல்வதற்காக தாளூரில் இருந்து கோவை சென்ற அரசு பஸ்சில் பயணம் செய்தான். அப்போது படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக தெரிகிறது.

பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, வேகத்தடை வந்ததும் டிரைவர் பிரேக் போட்டார். அப்போது நிலைதடுமாறிய அஜய், படிக்கட்டில் இருந்து சாலையில் தவறி விழுந்தான். இதில் பலத்த காயம் அடைந்தான். உடனே சக பயணிகள் அவனை மீட்டு சுல்தான்பத்தேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story