நீச்சல் பழக சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி


நீச்சல் பழக சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி
x

அரக்கோணத்தில் நீச்சல் பழக சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலியானான்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் வின்டர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன்கள் மோகன் (வயது 17), லோகேஷ் (16). அரக்கோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மோகன் அங்குள்ள விவசாய கிணற்றில் டியூப் மூலம் நீச்சல் பழகியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மோகன் சுமார் 90 அடி உள்ள நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் தீயணைப்பு வீரர் தெய்வமணி தலைமையிலான வீரர்கள் கிணற்றில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர தேடலுக்கு பின் பிணமாக மீட்டனர்.

மாணவனின் உடலை அரக்கோணம் டவுன் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story